தேவதானம்பேட்டை வள்ளலார் சங்கத்தில் நலத்திட்டம் வழங்கும் விழா
ADDED :1165 days ago
செஞ்சி: தேவதானம்பேட்டை வள்ளலார் சங்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டை வள்ளலாளர் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மைய நிர்வாகி அண்ணாமலை தலைமை தாங்கினார். மகாதேவன், செல்லப்பா, சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். ஸ்ரீரங்க பூபதி கல்வி அறக்கட்டளை தலைவர் ரங்கபூபதி மரக்கன்றுகளை நட்டார். அன்னதானம் மற்றும் 300 பெண்களுக்கு இலவச சேலை வழங்குவதை துவக்கி வைத்தார். வள்ளலார் சங்க நிர்வாகிகள் இளவரசன். அபிராமி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன், ஜெயக்குமாரி, விஸ்வநாதன், சந்தானம், சிவா, விஜி, முருகன், கோமதி, சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.