காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தங்க தாலிச் சங்கலி காணிக்கை
ADDED :969 days ago
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி சித்தூரைச் சேர்ந்த காசி நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீ ஞானபிரசுனாம்பா அம்மாபாளுக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 36 கிராம் தங்க தாலிச் சங்கலியை காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு யிடம் கோயிலுக்கு வழங்கினார். காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தாயாருடன் அருள்பாலிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு மற்றும் கோவில் நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசி வழங்கி, சுவாமி அம்மையாரின் திருவுருவப்படம் மற்றும் தீர்த்தப் பிரசாதங்களையும் வழங்கினர்.