உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் 21 அடி உயரமுள்ள திருப்பாச்சேத்தி அரிவாள் பிரதிஷ்டை

திருப்புல்லாணியில் 21 அடி உயரமுள்ள திருப்பாச்சேத்தி அரிவாள் பிரதிஷ்டை

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் அருகே தேரடி கருப்பண்ணசாமி பீடம் உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் 21 அடி உயரமுள்ள நீண்ட பெரிய அரிவாள் பிரதிஷ்டை செய்யும் பணி நடந்தது. முன்னதாக பெரிய அரிவாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதுரை அருகே திருப்பாச்சேத்தியில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த அரிவாள் 21 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாசி களரி சிவராத்திரி அன்று கருப்பண்ணசாமி பெரிய அரிவாளுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. டி.எஸ்.பி., (ஓய்வு) தியாகராஜன் குடும்பத்தினர் நேத்திக்கடனாக அரிவாள் செய்து கோயிலுக்கு வழங்கினர். திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதியில் இவ்வளவு பெரிய அரிவாள் வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !