திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 5ம் நாள் குடவருவாயில் தீபாராதனை நடந்தது. நாளை சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கயது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி அம்பாள் காலை மற்றும் மாலை ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 5ம் நாளான நேற்று அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கீழரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது. 7ம் நாள் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முக பெருமான் உருகு சட்டபேரவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேல் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருள்கிறார். 8ம் நாள் சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெற்றி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து, கீழக்கோயில் சேர்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 14ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி, அம்மன் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி மேலக்கோயில் சேர்கிறார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சியில் கோயில் அலுவலக கண் காணிப்பாளர் சாத்தையா, கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண் டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.