கூடலூர் சக்தி விநாயகர் கோயிலில் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED :961 days ago
கூடலூர்: கூடலூர் ஆமைக்குளம் சக்தி விநாயகர் கோயில் 33ம் ஆண்டு திருவிழா, 17ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 18ம் தேதி, பகல் 12.30 நாடுகாணி தடுப்பணை பகுதியில் இருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கி, குடோன் வழியாக கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில், பக்தர்கள் வேல் பூட்டியும் பால்குடம் எடுத்தும் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. பகல் 12 30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் தேர் ஊர்வலம் தூங்கியது. ஊர்வலம், குடோன் பாண்டியன் டான்டீ சரகம் இரண்டு, மூன்று, ஆமைக்குளம் மரப்பாலம், பால் மேடு வழியாக சென்று கோவிலில் நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.