உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் பாலாலயம், சிறப்பு யாகம்

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் பாலாலயம், சிறப்பு யாகம்

சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ‘ராஜ கோபுரம்’ மற்றும் பரிவார தெய்வங்களுக்கான ‘பாலாலயம்’ சிறப்பு யாக பூஜைகளுடன் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள ராஜ கோபுரத்துக்கு வண்ணம் பூசும் பணி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு பாலாலயம் எனும் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. சிறப்பு யாகமும் நடந்தது. கோவில் நிர்வாக அலுவலர் அமுதசுரபி, பூசாரி சிவக்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. விரைவில் ராஜ கோபுர பணி தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !