திருக்கோவிலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான சூறை பெருவிழா
ADDED :1025 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் நகராட்சி பம்ப்ஹவுசில் அமைந்துள்ள வல்லபலிங்கேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் மயான சூறை விழா நடந்தது.
திருக்கோவிலூர் நகராட்சி பம்ப்ஹவுஸ் வலாகத்தில் அமைந்துள்ள வல்லப லிங்கேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் மயான சூறை விழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மயான சூறை பெருவிழா நடந்தது. காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மன் வீதி உலா துவங்கியது. பக்தர்கள் பலரும் பங்கேற்று கஞ்சூள்ளி கபாலம் அணிந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வீதி உலாவில் கலந்து கொண்டனர். மாலை 4:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தது. நாளை இரவு 7:00 மணிக்கு கும்பம் சாற்றுதல் வைபவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.