காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமிக்கு ஏகாந்த சேவை: சிறப்பு அபிஷேகம்
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 13 நாட்களாக (13.2.2023 முதல் 24.2.2023 வரை) மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் 13வது நாளான சனிக்கிழமை இரவு ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது. இந்த உற்சவத்தோடு வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
முன்னதாக உற்சவமூர்த்திகளை சிறிய பல்லக்குகளில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் மூலவர் சன்னதி எதிரில் இருந்து ஞானப்பிரசுனாம்பிகை மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரத்திற்கு (கோயிலுக்குள்)ஊர்வலமாக கொண்டு வந்தனர் .கோயிலின் நடை அடைக்கும் சமயத்தில் இரவு 9:30 மணிக்கு ஞானப் பிரசுனாம்பிகை தாயாரின் உற்சவமூர்த்தியை பல்லக்கில் வைத்து சிறப்பு கற்பூர ஆரத்திகள் கொடுக்கப்பட்டது தொடர்ந்து சுவாமியின் உற்சவமூர்த்தியையும் அதே பல்லக்கில் வைத்து ஞானப்பிரசுனாம்பிகா மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரம் அருகில் கொண்டு வந்தனர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊஞ்சலில் (படுக்கை) சுவாமி அம்மையார்களை ஊஞ்சலில் வைத்தனர் .தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்பித்து வேத மந்திரங்கள் முழங்க (சுவாமி அம்மையார்களை)உற்சவ மூர்த்திகளை வைத்து அர்ச்சகர்கள் பக்தர்கள் வெளியில் வந்து கதவுகளை சாத்தப்பட்டதோடு ஏகாந்த சேவை நிறைவடைந்தது இந்நிலையில் மகாசிவராத்திரி வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்ததை யொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்திகள் மற்றும் பரத்வாஜ் முனிவர் ( உற்சவ மூர்த்தி கள்) சாந்தி அபிஷேகங்களை சாஸ்திர பூர்வமாக நடத்தப்பட்டது வருடாந்திர மகா சிவராத்திரியில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் அதிகாரிகள் யாரேனும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை சாந்தப்படுத்துவதற்காக இந்த சாந்தி அபிஷேகங்கள் நடத்துவதாக கோயில் அர்ச்சகர்கள் தெரியப்படுத்தினர் .இந்நிலையில் கங்காதேவி சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞான பிரசுனாம்பிகா தேவி உட்பட விநாயகர் வள்ளி தேவியானை சமேத சுப்பிரமணிய சுவாமி சண்டிகேஸ்வரர் பக்த கண்ணப்பர் திரிசூலம் மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவமூர்த்திகளுக்கு வேதப் பண்டிதர்கள் பல்வேறு சுகந்த திரவியங்களால் அபிஷேகங்களை சாஸ்திர பூர்வமாக நடத்தப்பட்டனர். தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்தனர். அர்ச்சகர்கள் முன்னதாக கலசம் ஏற்பாடு செய்து யாகம் வளர்த்தனர் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டனர் .இதில் கோயில் அதிகாரிகள் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.