உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவர் யாகம்

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவர் யாகம்

போடி: அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், கல்வியில் மென்மேலும் வளர்ச்சி காண வேண்டி போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் கல்விக்கு முழு அதிபதியான குதிரை முகம் கொண்ட ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவகருக்கு தேர்வுக்கான யாக சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. யாகத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தும் பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை யாகம் பூஜையில் வைத்து யாகம் செய்த பின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !