தர்ம முனீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :1347 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் கண்மாய்கரை அருகே உள்ள தர்ம முனிஸ்வரர் கோயிலில் 10ம் ஆண்டு வருஷாபிஷேகம், மாசிக்களரி விழா நடந்தது.இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலபூஜை நடந்தது.தர்ம முனீஸ்வரருக்கு சிறப்புபூஜைகள் ,அபிஷேகம் நடந்தது. காலை விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்பு தர்ம முனீஸ்வரருக்கு பால், சந்தனம், விபூதி மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் முடிக்காணிக்கை ,கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். கமிட்டியாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.