உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி

புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி

பண்ருட்டி, : புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில், மூலவர் காசி விஸ்வநாதர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவிலில், மூலவர் லிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் நிகழ்வு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 6:45 மணியளவில், மூலவர் காசிவிஸ்வநாதர் லிங்கத்தின் திருமேனி மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !