உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று கச்சத்தீவு திருவிழா : 2408 பக்தர்கள் கடல் பயணம்

இன்று கச்சத்தீவு திருவிழா : 2408 பக்தர்கள் கடல் பயணம்

ராமேஸ்வரம்: இன்று (மார்ச் 3) கச்சத்தீவில் நடக்கும் திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 2408 பக்தர்கள் படகில் கடல் பயணம் செல்கின்றனர்.

இன்றும், நாளையும் கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச்சில் திருவிழா நடக்க உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 2408 பேர் விருப்ப மனு கொடுத்தனர். இன்று காலை 11 மணிக்கு கச்சத்தீவில் கொடி ஏற்றத்துடன் விழா துவங்க உள்ளது. இதற்காக இன்று காலை 5:30 மணி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து 60 விசைப்படகு, 12 நாட்டுப்படகில் 2408 பக்தர்கள் கடல் பயணம் செல்ல உள்ளனர். பக்தர்கள், படகுகளை சுங்கத்துறை, மரைன் போலீசார் தீவிர சோதனை உட்படுத்திய பின்பு கச்சத்தீவுக்கு அனுமதிப்படுவார்கள். இவ்விழா பாதுகாப்புக்காக இந்திய, இலங்கை கடற்படை, கடலோர காவல் படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மார்ச் 4ல் விழா முடிந்ததும் பக்தர்கள் மதியம் 12 மணி முதல் ராமேஸ்வரம் கரை திரும்புவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !