திருக்கோஷ்டியூர் மாசித் தெப்பம்: குடிநீர், கழிப்பறை பணிகள் மந்தம்
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூரில் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு நடைபெறும் ஏற்பாடுகளில் குடிநீர், நிழற்கொட்டகை பணிகளில் தீவிரம் காட்டப்படவில்லை.
சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உத்ஸவம் துவங்கி 5 நாட்கள் முடிந்து விட்டன. வழக்கமான பணிகளில் தான் தீவிரம் காட்டப்படுகிறது. அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை கேற்ப குடிநீர், கழிப்பறை வசதிகள் அமைக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக வரும் பக்தர்கள் குடிக்கக் கூட தெப்பக்குளம் பகுதியில் குடிநீர் வசதி இல்லை. இந்தாண்டு கோடை கால வெப்பம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பக்தர்களுக்கு போதிய அளவில் குடிநீர் மற்றும் நிழற்கொட்டகை அவசியம். மேலும் மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட்டம் கூடுவதால் 11 வது நாளும் நீட்டிக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவஸ்தானம் தரப்பில் கூறுகையில், தெப்பக்குளம் பகுதியில் 9 குடிநீர் தொட்டிகள் மேலும் பரவலாக 22 இடங்களில் நாளை குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் குடிநீர் வைக்கப்படும். தெப்பக் குளம் அருகில் கூடுதலாக நிழற்கொட்டகை அமைக்கப்படும் என்றனர்.