மூணாறில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை
ADDED :1073 days ago
மூணாறு: மூணாறில் இருந்து பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்ற வண்ணம் உள்ளனர்.
மூணாறில் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் குழுக்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்கள் தனித்தனி குழுக்களாக டிசம்பர் முதல் மாலையிட்டு பாதயாத்திரை சென்று வருகின்றனர். ஒவ்வொரு குழுக்களும் தங்களின் வசதிக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடை பயணத்தை அமைத்துக் கொள்கின்றனர். மூணாறு நகர், பல்வேறு எஸ்டேட்டுகள், இடமலைகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70 பக்தர்களை கொண்ட சண்முகநாதன் குழு நேற்று பாதயாத்திரை புறப்பட்டனர். காலை மாலை வேளையில் கடுங்குளிர், பகலில் சுட்டெரித்த வெயில் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் அரோகரா கோஷங்ங்கள் முழங்க பக்தர்கள் நடந்து சென்றனர்.