திருப்புவனத்தில் புஷ்ப பல்லக்கில் பவனி வந்த பாலகிருஷ்ண பெருமாள்
ADDED :2 days ago
திருப்புவனம்: திருப்புவனம் பாலகிருஷ்ணபெருமாள் கோயில் 128வது ஆண்டு சித்திரை பெருவிழா முன்னிட்டு நேற்று இரவு 9:00 மணிக்கு பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்புவனத்தில் ஶ்ரீசத்யபாமா ருக்மணி சமேத பாலகிருஷ்ண பெருமாள் கோயில் 128 வது ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி திருக்கல்யாண உற்ஸவமும், 26ம் தேதி அழகம்பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளினார். 27ம் தேதி திங்கட்கிழமை இரவு ஏழு மணிக்கு வீரபத்திர சாமி கோயிலில் அலங்கரிக்கப்பட்ட புஷ்பபல்லக்கில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பால கிருஷ்ண பெருமாளை தரிசனம் செய்தனர். நேற்று காலை பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் யாதவ பண்பாட்டு கழகமும் செய்திருந்தனர்.