பெரியகுளத்தில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :162 days ago
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில், சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அர்ச்சகர் ஸ்ரீராம், மாலை அணிவித்து அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் மொய் விருந்து வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு வளையல், குங்குமம், வாழைப்பழம், தேங்காய் பிரசாதம் வழங்கப்பட்டது. தென்கரை சுதந்திரவீதியில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மீனாட்சியம்மன் முன் உட்கார்ந்து புதிதாக தாலி கட்டிக் கொண்டனர். . வடகரை தையல் நாயகி- வைத்தியநாத கோயிலில், சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.