உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் சொக்கர் கோயிலில் திருக்கல்யாணம்

ராஜபாளையம் சொக்கர் கோயிலில் திருக்கல்யாணம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

ராஜபாளையம் கோயில் மாசி பிரம்மோற்ஸவ 10 நாள் திருவிழா கடந்த பிப்.25ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். 7ம் நாளான நேற்று மீனாட்சியுடன் சொக்கருக்கு பக்தர்கள் கரகோஷத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி ஊஞ்சலில் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !