காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1107 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நேற்று ( செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதி (சுப்ரீம் கோர்ட்) ஸ்ரீ பங்கஜ் மித்தல் மற்றும் கனிகா மித்தல் ஆகியோர் குடும்பத்தா ரோடு இன்று சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் மூலவர் சன்னதில் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.மேலும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.