உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ணப் பொடி தூவி உற்சாகத்துடன் ஹோலி கொண்டாடிய வட மாநிலத்தவர்கள்

வண்ணப் பொடி தூவி உற்சாகத்துடன் ஹோலி கொண்டாடிய வட மாநிலத்தவர்கள்

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், வண்ணப்பொடி தூவி, வட மாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடினர்.அன்னூர் வட்டாரத்தில், கரியாம்பாளையம், கணேசபுரம், பொன்னேகவுண்டன் புதூர், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் வண்ணப் பொடியை நண்பர்கள் மீது தூவினர். நண்பர்களின் கன்னங்களில் வண்ணப் பொடியை பூசி மகிழ்ந்தனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல் பரவி வரும் நிலையில், அன்னூர் வட்டாரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை வட மாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !