திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு பட்டாபிஷேக வைபவம்
ADDED :1024 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த, பட்டாபிஷேக வைபவத்தை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை பகுதியை ஆண்ட வள்ளாள மஹாராஜா, குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை வேண்டியதால், அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்ததாக தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், வள்ளாள மஹாராஜா போரில் உயிரிழந்து விடும் நிலையில், அவருக்கு கடந்த, 6ல் மாசி மகத்தன்று, திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு துரிஞ்சலாற்றில், அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அதைத்தொடர்ந்து கோவிலிற்கு திரும்பிய வள்ளாள மஹாராஜாவின் வாரிசான அண்ணாமலையாருக்கு, நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைக்கும் விதமாக, பட்டாபிஷேக விழா நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.