பூரம் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு
ADDED :1111 days ago
உடுமலை: உடுமலை, ஆண்டாள் நாச்சியார் கோவிலில், பூரம் நட்சத்திரம் சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை, அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், நேற்று, பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், உட்பட 20 திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. சிவப்பு நிற பட்டுடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.