காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டு பக்தர்கள் தரிசனம்
ADDED :1334 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை ரஷ்ய நாட்டு (வெளிநாட்டு) பக்தர்கள் (ஒரு குழுவினர்) ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர் .கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்கள் கோயிலுக்குள் அமைந்திருக்கும் சிற்ப கலைகளை கண்டு வியந்தனர்.மேலும் கோயிலில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை கண்டு வியந்ததோடு மன மகிழ்ச்சி அடைந்தனர். மிகப் பழமையான கோயிலில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ததில் தாங்கள் மன அமைதியும் நிம்மதியும் அடைந்ததாக தெரிவித்தனர்.