உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் தயாரான 110 அடி தேர் வடம்

சிங்கம்புணரியில் தயாரான 110 அடி தேர் வடம்

சிங்கம்புணரி: காரைக்குடி அருகே தலக்காவூர் அதலி நாயகியம்மன் கோயில் தேர் திருவிழாவிற்காக சிங்கம்புணரியில் தேர் வடம் தயாரிக்கப்பட்டது.

சிங்கம்புணரி பகுதியில் கயிறு உற்பத்தி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ள நிலையில் இங்கு பல்வேறு கோயில்களுக்கு தேர் வடம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. காரைக்குடி அருகே தலக்காவூர் அதலி நாயகியம்மன் கோயில் தேர் திருவிழாவிற்காக இங்கு கடந்த ஒரு வாரமாக தேர் வடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர் வட உற்பத்தியாளர் நல்லதம்பி கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக 40 தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து 110 அடி நீளமும் 15 இன்ச் அகலமும் கொண்ட 2 தேர் வட கயிறுகளை தயாரித்துள்ளோம். எத்தனை அடி நீளத்தில் வேண்டுமானாலும் இங்கு வடக்கயிறு தயார் செய்து கொடுக்க முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !