மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் மூலவரை தரிசித்த சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்
ADDED :1278 days ago
மதுரை : தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது. மார்ச், செப்டம்பரில் சில நாட்கள் மட்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கும். நேற்று மண்டபத்தை தொட்டபடி உதித்த சூரிய பகவான் நந்தியை கடந்து பிரவேசித்தார். இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று துவங்கிய இந்நிகழ்வு மார்ச் 27ம் தேதி வரை காலை 6:45 மணி முதல் 7:15 வரை பக்தர்கள் கண்டு பரவசம் அடையலாம்.