உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் உலா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் உலா

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலையில் அம்மன் மண்டபம் எழுந்தருளல், இரவில் வீதி உலா நடக்கிறது. விழா ஐந்தாம் நாளில் நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏப்ரல் 11 மதியம் 1:35 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஏப்ரல் 12 மதியம் 12:15 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் கலாராணி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !