உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்களத்தி அம்மன் கோவில் தேர் திருவிழா துவக்கம்

முக்களத்தி அம்மன் கோவில் தேர் திருவிழா துவக்கம்

திட்டக்குடி: திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் துவங்கியது. திட்டக்குடி மேலவீதியில் எல்லை தெய்வமான முக்களத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக பரிகார பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து சிம்மவாகனத்தில் முக்களத்தி அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !