உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.81 கோடி

அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.81 கோடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோவில் உண்டியல் காணிக்கை முதல் நாள் எண்ணப்பட்டதில், இரண்டு கோடியே, 81 லட்சத்து, 18 ஆயிரத்து, 750 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மாசி மாத பவுர்ணமி முடிந்த நிலையில்,   உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. இதில், நேற்று முதல் நாளில்,  இரண்டு கோடியே, 81 லட்சத்து, 18 ஆயிரத்து, 750 ரூபாய், 405 கிராம் தங்கம், 2,385 கிராம் வெள்ளி, ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று, இரண்டாவது நாளாக உண்டியல் எண்ணும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !