உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்த தேசிய நுகர்வோர் உரிமை ஆணைய தேசிய பிரதிநிதி

காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்த தேசிய நுகர்வோர் உரிமை ஆணைய தேசிய பிரதிநிதி

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமியை தேசிய நுகர்வோர் உரிமை ஆணையத்தின் தேசிய பிரதிநிதி மற்றும் பிரபல திரைப்பட மற்றும் நகைச்சுவை நடிகர் குண்டு சுதர்சன் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ய வந்தவரை ஆந்திர மாநில தேசிய நுகர்வோர் உரிமைகள் ஆணைய துணை தலைவர் கோட்டீஸ்வர பாபு மற்றும் கோயில் அதிகாரிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு செய்தனர்.கோயிலுக்குள் சென்ற  குண்டு சுதர்சன் முன்னதாக (ரூ.2,500) ராகு-கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டார்.  பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின், மிருத்யுஞ்சய சுவாமி சன்னதியில், கோவில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் வழங்கினர்.  சுவாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.  தரிசனத்துக்குப் பிறகு கோயிலுக்கு வெளியே குண்டு சுதர்சன் கூறியதாவது... ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் தேசிய நுகர்வோர் உரிமை ஆணையத்தின் பணிகளைப் பாராட்டினார்.தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.  இந்த திரைப் படங்கள் வெற்றியடைய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமியிடம் வேண்டியதாகவும் தேசிய நுகர்வோர் உரிமைகள் ஆணையத்தின் தென்னிந்திய தலைவர் டாக்டர் கே.சி.குசுமகுமாரி, ஆந்திர மாநில மகளிர் துணைத் தலைவர் பண்டாரு.சுசரிதா, பிஆர்ஓ வேணுகோபால் ரெட்டி, மாநில பார்வையாளர்கள் வெங்கடேஷ், உணவு மற்றும் சுகாதார மாநில பார்வையாளர் ஹரீஷ் ரெட்டி, தாளபாக சுரேஷ், மாநிலக்குழு உறுப்பினர்கள் பரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !