உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவரேந்தல் கற்பக விநாயகர் கோயிலில் பூக்குழி விழா

ஆவரேந்தல் கற்பக விநாயகர் கோயிலில் பூக்குழி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தல் கற்பக விநாயகர் கோயில் பூக்குழி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் பாலம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக , காவடி எடுத்தும், வேல் குத்தியும், பால்குடத்துடன் விநாயகர் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !