மதுரை மீனாட்சி கோயிலில் மொபைல் போனில் படம் எடுக்க ரூ.50!
ADDED :4779 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மொபைல் போனில் படம் எடுக்க, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கோயிலில், கேமராவில் படம் எடுக்க, 50 ரூபாய், வீடியோவிற்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேமராவிற்கு பதில், அந்த வசதி உடைய மொபைல் போன் களை பயன்படுத்தி படங்கள் எடுப்பதாக, கோயில் நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, மொபைல் போனில் படம் எடுக்க,
கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாமல், படம் எடுத்தால், ஊழியர்கள் தேடிவந்து வசூலிக்கின்றனர். நிர்வாகத்திடம் கேட்டபோது, மொபைல் போனில் தேவையற்ற படங்கள் எடுப்பதாக புகார் வந்தது. இதைத் தடுக்கவே, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றனர்.