கமுதி காளியம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED :983 days ago
கமுதி: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் முளைப்பாரி விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்புபூஜை, அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக காப்புகட்டிய பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து வந்தனர். பின்பு கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை முன்னிட்டு முளைக்கொட்டு திண்ணையில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை தூக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஊரணியில் கரைத்தனர்.அதற்கு முன்பாக ஒயிலாட்டம்,சிலம்பாட்டம் விளையாடி ஊர்வலமாக சென்றனர்.விழாவில் கமுதியை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.