உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் மீண்டும் துவக்கம்

வனபத்ரகாளியம்மன் கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் மீண்டும் துவக்கம்

மேட்டுப்பாளையம்: பணிகள் நடைபெறாமல் இருந்த, வனபத்ரகாளியம்மன் கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிகளை, 5.30 கோடி ரூபாய் செலவில், மீண்டும் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். கோவில் முன்பு, 101 அடியில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட, 2016ம் ஆண்டு 3.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2017ம் ஜன., யில் பணிகள் துவங்கின. கல்காரப்பணி பாதியளவு முடிந்த நிலையில், 2018 நவம்பர் மாதம் பல்வேறு காரணங்களால், பணிகள் நின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக, ராஜகோபுர பணிகள் ஏதும் நடைபெறாமல் அப்படியே நின்று இருந்தது. பக்தர்கள், அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 5.30 கோடி ரூபாய் செலவில், ராஜகோபுரம் கட்டும் பணியை காலி காட்சி வாயிலாக மீண்டும் துவக்கி வைத்தார். ஏழு நிலை ராஜகோபுரத்தில் கல்காரப்பணி, 11 அடிக்கும், ராஜகோபுரம் பணிகள், 73 அடிக்கும் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இது உபயதாரர் வாயிலாக பணிகள் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் பணிகள் நடைபெற உள்ளன.  நேற்று கோவில் ராஜகோபுரம், அருகே நடந்த துவக்க விழாவில் கோயில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா, ஹிந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வினோத், தாசில்தார் மாலதி, மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் கல்யாண சுந்தரம், சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !