உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 54 ஆண்டுகளுக்கு பிறகு ஜலக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

54 ஆண்டுகளுக்கு பிறகு ஜலக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

கோவில்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஜலக்கண் மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கள்ளிப்பாளையும் ஊராட்சி, பெத்தநாயக்கன்பாளையத்தில், ஸ்ரீ அம்மன் நகரில், 85 ஆண்டுகள் பழமையான ஜலக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு, திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது. கடந்த 27ம் தேதி கம்பம் நடுதல், காப்பு கட்டுதல், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடுதல், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும், காலை 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தலும் நடந்தது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது, பல நூறு பக்தர்கள் பங்கேற்ற மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலையில் அலகு குத்தி தேர் இழுக்கும் வைபவம் நடந்தது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்ததால் இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !