பழநி கோயிலில் குவிந்த விண்ணப்பங்கள்
ADDED :993 days ago
பழநி: பழநி, கோயிலில் அறிவிக்கப்பட்ட காலியிட பணிகளை காண விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.
பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் செயல்படும் நிறுவனங்களில் காலி பணியிடங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 281 பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நேற்று (ஏப்.7.,) நிறைவடைந்த நிலையில், பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கோயில் அலுவலகத்தில் மூட்டை மூட்டையாக வந்து சேர்ந்துள்ளன. இதனை கோயில் அலுவலர்கள் பணிவாரியாக பிரித்து வருகின்றனர்.