உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் பங்குனித்திருவிழா

குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் பங்குனித்திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கியது.

இக்கோயிலின் பங்குனித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலை முதல் பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்தனர். அம்மனுக்கு பாலலாபிஷேகம் செய்யப்பட்டு பூச்சொரிதல் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். நாளை (ஏப். 10) இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தினமும் அம்மன் சப்பரத்தில் வீதி உலா வருகிறார். 9-ம் திருநாளான ஏப். 18ம் தேதி பிடாரி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஏப். 19ம் தேதி கிடாவெட்டி அம்மனுக்கு வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !