உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா : தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

செஞ்சை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா : தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி: காரைக்குடி செஞ்சை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது.

காரைக்குடி செஞ்சை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய திருவிழாவான இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் செஞ்சை மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திடீரென்று சிறுவன் ஒருவன் பக்தி பரவசத்தில் தீ மிதித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !