உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்

முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்

மேலுார்: மேலுாரில் முத்துமாரியம்மன் கோயில் 32 ம் ஆண்டு பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத் திருவிழாவில் மேலுாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !