உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் புதிய வின்ச் பெட்டிகள் பொருத்த முன்னேற்பாடு

பழநியில் புதிய வின்ச் பெட்டிகள் பொருத்த முன்னேற்பாடு

பழநி: பழநி, மலைக்கோயில் சென்று வர பயன்படும் வின்ச் சேவைக்கு புதிய பெட்டிகளை பயன்படுத்த முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பழநி மலைக்கோயில் சென்று வர படிப்பாதை, யானை பாதை உள்ளது. ரோப் கார், வின்ச் சேவைகள் உள்ளன. தற்போது மூன்று வின்ச் பாதைகள் மலைக்கோயில் சென்று வர செயல்பாட்டில் உள்ளது. இதில் வின்ச் மூலம் 7 நிமிடம் முதல் 10 நிமிடங்களுக்குள் 36 நபர்கள் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம். கடந்த சில நாட்களுக்கு முன் புதிய இரண்டு வின்ச் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டு மலைக்கோயில் வின்ச் ஸ்டேஷனில் வைக்கபட்டுள்ளது. இதில் 72 நபர்கள் மலை கோயில் சென்று வர முடியும். இதன் மதிப்பு ரூ.ஒரு கோடி என கூறப்படுகிறது. இதனை மூன்றாவது வின்ச் பாதையில் புதிய வின்ச் பெட்டிகளை, பொருத்த வசதியாக இயந்திரங்கள் மூலம் அப்பகுதி தயார் செய்யப்படுகிறது. இதன் பின் புதிய வின்ச் பெட்டிகள் தண்டவாளத்தில் பொருத்தப்படும். அதன் பின் பக்தர்கள் வசதிக்காக நடைமேடை ஆகியவை மாற்றி அமைக்கப்படும். விரைவில் புதிய வின்ச் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !