கூடலுார் ராஜகாளியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :1007 days ago
கூடலுார்: மழை வேண்டி கூடலுார் ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கூடலுார் பாரதியார் தெருவில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகரித்த நிலையில் மானாவாரி விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் மழை வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். சிறுவர்கள், பெண்கள், முதியோர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டன. மாலையில் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று கோயிலை அடைந்தனர்.