தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு : வடபழனி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1082 days ago
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில் சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.