திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED :1075 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, சம்பந்த விநாயகர் சன்னதி முன், சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை வாசித்தனர். சம்பந்த விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் தங்கத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், பழ வகைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூத நாராயண பெருமாள் மூலவர் மற்றும் உற்சவர் அருள்பாலித்தனர்.