தமிழ் புத்தாண்டு : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் வீதி உலா
ADDED :1072 days ago
ராமேஸ்வரம்: தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர்.
தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன், பிரியாவிடை அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரைக்கு புறப்பாடாகினர். அங்கு காத்திருந்த பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்ததும், கோயில் நான்கு ரத வீதியில் சுவாமி, அம்மன் உலா வந்தனர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.