உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் சௌந்தர்ய கனகாம்பிகை சமேத அதுல்ய நாதேஸ்வரர் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அரகண்டநல்லூர், அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சவுந்தர்ய கனகாம்பிகை சமேத அதுல்ய நாதேஸ்வரர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி சிவ பக்தர்களால் பதிகம் பாடி, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !