கிருஷ்ணய்யர் வேதசாஸ்திர பாடசாலையில் சங்கரர் ஜெயந்தி
ADDED :941 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீமலையாளம் கிருஷ்ணய்யர் வேதசாஸ்திர பாடசாலையில் அத்யாபகர் வரதராஜ பண்டிட் ஜி தலைமையில் ஸ்ரீசங்கர ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை சங்கரர் வீதியுலா புறப்பாடு நடந்தது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் உபநிஷத் பாராயணங்கள், கணபதி ஹோமம், வசோர்தாரா ஹோமம், மஹா பூர்ணாஹுதி, சதுர் வேத பாராயணம், பிக்ஷா வந்தனம், தோடகாஷ்டகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து மாணாக்கர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கினர். மலையாளம் கிருஷ்ணய்யர் சாரிடபிள் டிரஸ்ட் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.