செய்யாமங்கலம் பூங்குழலி அம்மன் கோயில் புரவி எடுப்புவிழா!
ADDED :4867 days ago
கமுதி: கமுதி அருகே செய்யாமங்கலம் பூங்குழலி அம்மன் - அய்யனார் கோயில் உள்ளது. மண்ணால் செய்யப்பட்ட இரண்டு பெரிய குதிரை, சிறிய குதிரை, பதினைந்து மாறுபட்ட உருவம் கொண்ட மனித பொம்மைகள் தயாரித்து, அபிராமம் காளிகோயிலில் நேற்று பூஜை நடத்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர். கொடுமலூர் முருகன் கோயிலில் பூஜை செய்துவிட்டு, வந்து சிலைகளுக்கு மாலை அணிவித்து, மீண்டும் ஊர்வலமாக செய்யாமங்கலம் சென்றனர்.