பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு மலர் வழிபாடு
ADDED :914 days ago
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 400 கிலோ பூக்களை கொண்டு மலர் வழிபாடு நடந்தது.
பேரூர் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், பட்டீஸ்வரருக்கு மலர் வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு, சித்திரை மாத மலர் வழிபாடு, நேற்று நடந்தது. இதில், மல்லி, வில்வ இலை, நாகலிங்க பூ, தாமரை, அரளி, செண்டுமல்லி என, 35 வகையான, சுமார் 400 கிலோ பூக்களை கொண்டு, பேரூர் பட்டீஸ்வரருக்கு மலர் வழிபாடு நேற்று இரவு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.