அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மதன் தகனம்; வசந்த உற்சவம் நிறைவு
ADDED :855 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ நிறைவையொட்டி மன்மதனை தகனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று, கொழுந்து விட்டு எரியும் தீயில் மன்மதனை தகனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரை வசந்த உற்சவ நிறைவையொட்டி, தங்க கொடி மரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் பக்தர்களளுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.