உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்கிரத் தலங்கள்

சுக்கிரத் தலங்கள்

அவனுக்கென்ன சுக்கிரதிசை அடிக்குது! என்று அதிர்ஷ்டசாலியை பாராட்டுவது உண்டு. காரணம், சுக்கிரனே ஒருவருக்கு உலக இன்பங்களை வாரி வழங்குபவர். அழகு, வசீகரம், சாதுர்யம், சங்கீதம், நடனம், ஆடம்பரம், சுகபோகம் ஆகியவற்றுக்கு அதிபதியாக  திகழ்கிறார். ஒருவரது வாழ்வில் 20 ஆண்டு காலம் இவரது திசை ஒருவருக்கு நடக்கும். மற்ற திசைகள் இதை விட குறைவாகவே இருக்கும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சூரியனார் கோயில் அருகில் உள்ள கஞ்சனூர், பண்ருட்டி அருகில் உள்ள திருநாவலூர், திருத்தணி முருகன் கோயில் ஆகியவை சுக்கிரனுக்கு உரியவை.  சூரியனார் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது. ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !