உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சனை பூக் கல்

அர்ச்சனை பூக் கல்

காஞ்சிபுரம் அருகில் திருச்சங்கமங்கை என்னும் ஊரில் வாழ்ந்த சாக்கியர் என்ற சிவபக்தர், ஒருநாள் காட்டு வழியில் சிவலிங்கத்தைக் கண்டு மெய் சிலிர்த்தார். அர்ச்சிக்க பூக்களைத் தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. கண்ணில் கண்ட சிறுசிறு கற்களை பூக்களாக பாவித்து இறைவனின் திருவடியில் சேர்த்தார். அதனையே அர்ச்சனை பூக்களாக ஏற்ற சிவன், சாக்கியரை நாயன்மார்களில் ஒருவராக ஏற்று அருள்புரிந்தார். இவர் கல்லெறிந்த நாயனார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !