உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்மலை வடுகபைரவர் கோயில் தெப்பக்குளத்தில் கலக்கும் செப்டிக் டேங்க் கழிவு

பிரான்மலை வடுகபைரவர் கோயில் தெப்பக்குளத்தில் கலக்கும் செப்டிக் டேங்க் கழிவு

பிரான்மலை: பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில் தெப்பகுளத்தில் தனியார் மண்டப செப்டிக் டேங்க் கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது. இக்கோயில் அடிவாரத்தில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. இதனருகே தனியார் மண்டபத்திற்கான செப்டிக் டேங்க் கட்டப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடக்கும் போது மழைக்காலங்களில் இதன் கழிவுகள் நிறைந்து சில நேரங்களில் தெப்பக்குளத்திற்குள் கலக்கிறது. இக்குளத்து தண்ணீரை அப்பகுதி மக்கள் பலர் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தனியார் மண்டப செப்டிக் டேங்கை பாதுகாப்பாக மண்டபத்திற்கு உள்ளாகவோ அல்லது வேறு இடத்திலோ அமைத்துக் கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !